Traker

Sunday, February 28, 2010

மீலாது விழா கொண்டாட முடியுமா?



فَلْيَحْذَرْ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيم

”எவர் அவருடைய (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்) கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக்கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:63)

Share

வியாபார நுணுக்கங்களின் தகவல்கள் சில

முதலில் சுத்தம்
தொழில் ஆற்றும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் , உடை சுத்தமாக இருக்க வேண்டும், சுத்தமான கை மற்றும் விரல் நகங்கள் ஆகியவை சுத்தமாக இருந்தால் 50 சதவிகிதம் இலாபம் கிடைத்து விட்டதாக மேல்நாட்டு வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதையே இஸ்லாம் சுத்தம் ஈமானின் ஒரு பகுதி என்று மக்களுக்கு பரிந்துரை செய்கின்றது.


 
Share

Saturday, February 20, 2010

நிழல் தந்த மரமும் மனிதனும்

ஒரு ஊர் ஒன்றில் பெரிய ஆப்பிள் மரம் ஒன்று வளர்ந்து கிளை பரப்பி  மிக அழகாக இருந்தது. ஒரு சிறுவன் அந்த மரத்தினடியில் பொதுவாக எப்போதும் விளையாடிக்கொண்டிருப்பான். அந்த மரத்தின் மீது ஏறி விளையாடுவதும் அதன் கனிகளை பறித்து உண்பதும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். களைப்பாக இருக்கும்போது அந்த மரம் தரும் நிழலில் உறங்கி ஓய்வெடுப்பான்.

Share

Friday, February 19, 2010

Is Something Bothering You




Share

Tuesday, February 16, 2010

இஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம்



இளசுகளின் மனம் மறந்தவிடாது அலைபாயும் ஒரு தினம் என்றால் பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினம்!


பெப்ரவரி மாதத்தை பொறுத்தவரை எமது நாட்டுக்கு முக்கியமான ஒரு மாதம். சுமார் ஒரு நூற்றாண்டு காலம் கிறிஸ்தவ ஆங்கியர்களுக்கு அடிமைப் பட்டு கிடந்து சுதந்திரம் அடைந்த மாதம்.
Share

Sunday, February 14, 2010

சபித்தல்


  • பெரும்பாலோர் கோபப்படும் பொழுது தமது நாவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உடனே சாபமிட்டு விடுகின்றனர். அந்த நேரத்தில் மனிதர்கள், உயிரினங்கள், திடப்பொருட்கள், காலங்கள், நாட்கள், நேரங்கள் யாவற்றையும் சபித்து விடுகின்றனர். இன்னும் சொல்வதானால் சிலவேளை தங்களையும் தங்கள் குழந்தைகளையும் கூட சபித்து விடுகின்றனர். மட்டுமல்ல கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் சபிக்கின்றனர். இது தீய ஆபத்தான செயலாகும்.

'....ஒரு மூமினை சபித்தவன் அவனை கொலை செய்தவன் போலாவான்' என்பது நபிமொழி. ஸாபித் பின் ழஹ்ஹாக் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரியில் உள்ளது.

  • பெண்கள் அதிகம் சபிக்கின்றார்கள். அதுவே அவர்கள் நரகில் நுழைவதற்குக் காரணமாக அமைகின்றது என்பதை நபி (ஸல்) அவர்களும் தெளிவுபடுத்தி உள்ளார்கள். அதுபோல சபிக்கின்றவர்கள் மறுமையில் பரிந்துரை செய்பவர்களாக இருக்க மாட்டார்கள். இதில் ஆபத்தானது என்னவெனில் அநியாயமாக ஒருவன் ஒருவனை சபித்தால் அவனது சாபம் அவன் மீதே திரும்பி விடுகின்றது. அந்த நேரத்தில் அவன் தனக்கெதிராக தானே இறையருளை விட்டும் தூரமாவதற்குப் பிரார்த்தித்தவனாகின்றான்
Share

சுவர்க்க வாசிகள் vs நரக வாசிகள்




சுவர்க்க வாசிகள் vs நரக வாசிகள்

  • இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்) (56:20,21)
  • உணவு அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. அது அவர்களைக் கொழு(த்துச்செழி)க்கவும் வைக்காது அன்றியும் பசியையும் தணிக்காது. (88:6,7)
நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள் அதன் கலப்பு கற்பூரமாக இருக்கும் (76:5)
பானம்

  • அவனுக்கு முன்னால் நரகம் தான் இருக்கிறது, இன்னும் அவனுக்கு (துர் நாற்றமுள்ள) சீழ் நீரே குடிக்கக் கொடுக்கப்படும். அதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான். எனினும் அது அவன் தொண்டையில் எளிதில் இறங்காது ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்து கொண்டிருக்கும். எனினும் அவன் இறந்து விடுபவனும் அல்லன். அன்றியும் அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையும் உண்டு. (14:16,17)
  • அவர்களின் மீது ஸுன்துஸ்இஸ்தப்ரக் போன்ற பச்சை நிறபூம்பட்டாடைகள்இருக்கும்இன்னும் அவர்கள் வெள்ளியாலாகியகடகங்கள்அணிவிக்கப்பட்டிருப்பர்அன்றியும்அவர்களுடைய இறைவன்அவர்களுக்குப்பரிசுத்தமான பானமும் புகட்டுவான். (76:21)

  • ஆடை (முஃமின்களும்முஃமின்களல்லாதவருமான)இரு தரப்பாரும்தம்இறைவனைப் பர்ர்ர்றித் தர்க்கிக்கின்றனர்ஆனால்எவர்இறைவனை)நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பிலிருந்துஆடைகள்தாயாரிக்கப்படும்கொதிக்கும் நீர் அவர்கள் தலைகளின் மேல்ஊற்றப்படும். (22:19)
(
  • அந்நாளில் சிலமுகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்சிரித்தவையாகவும்,மகிழ்வுடையதாகவும் இருக்கும். (80:38,39)

  • தோற்றம் ஆனால் அந்நாளில் - (வேறுசில முகங்கள்அவற்றின் மீதுபுழுதிபடிந்திருக்கும். (80:40)

  • (பொன்னிழைகளால்செய்யப்பட்ட கட்டில்களின் மீது -ஒருவரையொருவர்முன்னோக்கியவர்களாக,
அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள். (56:15,16)
  • படுக்கை அவர்களுக்கு நரகத்தில் (நெருப்புவிரிப்புகளும், (போர்த்திக்கொள்வதற்குஅவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும்உண்டு - இன்னும்இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலிகொடுப்போம். (7:41)

  • எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோஅவர்கள்கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டுவரப்படுவார்கள்அங்கு அவர்கள்வந்ததும்அதன் வாசல்கள்திறக்கப்படும்அதன் காவலர்கள் அவர்களை நோக்கிஉங்கள் மீது சாந்திஉண்டாகட்டும்நீங்கள் மணம் பெற்றவர்கள் எனவேஅதில்பிரவேசியுங்கள் என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்" (என்றுஅவர்களிடம்கூறப்படும்). (39:73)
"
  • வரவேற்பு "நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள் என்றென்றும்அதில்தங்கிவிடுங்கள்என்று (அவர்களுக்குக்கூறப்படும் பெருமைஅடித்துக்கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது. (39:72)

  • அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான் சுவனபதிகளில்உங்களைபிரவேசிக்கச் செய்வான் அவற்றின் கீழே ஆர்ருகள்ஓடிக்கொண்டிருக்கும்அன்றியும்நிலையான அத்னு என்னும் நிலையானசுவர்க்கச் சோலைகளின்மணம் பொருந்திய இருப்பிடங்களும்(உங்களுக்குஉண்டு இதுவே மகத்தானபாக்கியமாகும். (61:12)

  • தங்குமிடம் அது சுட்டெரிக்கும் நெருப்பாகும் (101:11)

அவர்கள் நரகில் கருகுவார்கள் (83:16)

  • அவர்கள் செய்த (நற்)கருமங்களுக்குக் கூலியாக மறைத்துவைக்கப்பட்டுள்ளகண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தைஎந்தஓர் ஆன்மாவும் அறிந்துகொள்ள முடியாது. (32:17)

முன்னேற்பாடு மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதானையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)

  • அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்அவர்கள் அதிலிருந்துமாறி (வேறிடம்செல்ல விரும்ப மாட்டார்கள். (18:108)
  • நிரந்தரம் நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும்எவர்கள்நிராகரிக்கிறார்களோஅவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் -அதில்என்றென்றும்இருப்பார்கள் -இத்தகையவர்கள்தாம்
படைப்புகளில் மிகக் கேட்டவர் ஆவார்கள். (98:6)
Share

விரும்புகிறீர்களா...!

உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?


தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

Share
Related Posts with Thumbnails