Traker

Monday, October 11, 2010

நபி வழியில் நம் தொழுகை - 05 (நிய்யத் & தக்பீர்)

நிய்யத்

எந்த ஒரு வணக்க வழிபாட்டுக்கும் நிய்யத் என்ற எண்ணம் அவசியம். ஆகவே தொழுகை என்ற செயலுக்கும் நிய்யத் எனும் எண்ணம் தேவை.

"செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்ததேயாகும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி

"நிச்சயமாக இறைவன் உங்கள் உடல்களையோ தோற்றங்களையோ பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களைத்தான் பார்க்கிறான்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம்

தக்பீர் தஹ்ரீமா

தொழுகையில் ஆரம்பமாக கூறப்படும் தக்பீருக்கு தக்பீர் தஹ்ரீமா எனப்படும்.

"நீ தொழுகைக்காக தயாராகிவிட்டால் முழுமையாகச் உளூச் செய்து கஅபாவை முன்னோக்கி "அல்லாஹு அக்பர் எனக்கூறு" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம்

அல்லாஹு அக்பர் எனக் கூறி இரு கைகளையும் தோள் புஜங்கள் வரையோ அல்லது காது சோனைகள் வரையோ உயர்த்திட வேண்டும்.

"நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும்போது தங்களது இரு கைகளையும் இரு தோள் புஜங்கள் வரை உயர்த்தக் கூடியவர்களாக இருந்தார்கள்." என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி

"நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகைக்காக நின்றால் தங்களது இரு கைகளின் விரல்களும் மடக்கப்படாமல் இருக்கும் விதமாக தம் இரு கைகளையும் உயர்த்தக் கூடியவர்களாக இருந்தார்கள்." என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, திர்மிதீ

உயர்த்திய கைகளை நெஞ்சின் மீதுதான் வைக்க வேண்டும்

"நபி صلى الله عليه وسلم அவர்கள் (தொழுகையில் ஸலாம் கூறும் போது) தமது வலது புறமும், இடது புறமும் திரும்பியதை நான் பார்த்தேன். மேலும் (தொழுகையில்) வலது கையை இடது கையின் மணிக்கட்டு மீது வைத்து நெஞ்சின் மீது வைத்ததைப் பார்த்தேன்." அறிவிப்பவர்: ஹுல்புத்தாயி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அஹ்மத்

"நபி صلى الله عليه وسلم அவர்கள் தங்களது வலது கையை இடது முன்கை மீதும் இடது மணிக்கட்டின் மீதும் இடது குடங்கை மீதும் வைத்தார்கள்." அறிவிப்பவர்: இப்னு ஹுஜ்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ

"நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையில் நின்ற போது தங்களது வளக்கையைால் இடககையை பிடித்திருந்ததை நான் பார்த்தேன்." அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ

தொப்புளுக்குக் கீழே கைகளைக் கட்டவேண்டும் என்று சில அறிவிப்புகள் இருந்தாலும் அவை அனைத்துமே பலகீனமானவை என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

1, தொழுகையில் தொப்புகளுக்குக் கீழே (இடது) முன்கை மீது (வடது) முன்கையை வைப்பது சுன்னத்தாகும். என அலீ رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: அபூதாவூத்

2, தொழுகையில் தொப்புகளுக் கீழே முன்கையை, முன்கை மீது வைத்துக் கொள்ள வேண்டும். என அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் குறிப்பிட்டார்கள். நூல்: அபூதாவூத்

இந்த இரண்டு ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசையில் அப்துர் ரஹ்மான் பின் இஸ்ஹாக் அல் கூஃபி என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பற்றி ஹதீஸ் கலை வல்லுனர்களின் வருமாறு:

"பலவீனமானவர்" என இப்னு முயீன், இப்னு ஹிப்பான், அபூஸர்ஆ, அபூஹாதம், இப்னு குஸைமா, உகைலீ, அஜலீ, புகாரி, நவவீ ஆகியோர் விமர்சித்துள்ளனர். "இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டும்" என அபூஹாதம், ஸாஜி ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். தம் நூல்களில் பதிவு செய்துள்ள அபூதாவூத் அவர்களும் "இவரது ஹதீஸ்கள் ஏற்கத்தக்கவை அல்ல" என விமர்சனம் செய்துள்ளனர். எனவே இந்த ஆதாரமற்ற செய்தியின் அடிப்படையில் செயல்படலாகாது.

3, "தொப்புளுக்கு கீழே கையை வைப்பார்கள்" என இப்றாஹீம் கூறுவதாக ஒரு செய்தி முஸன்னப் இப்னு ஷைபா என்ற நூலில் உள்ளது. ஆனால் அப்படி வைப்பது யார் என்ற விபரமில்லை. மேலும் இப்றாஹீம் என்பவர் நபி صلى الله عليه وسلم அவர்களின் காலத்தைச் சேர்ந்தவரில்லை.

4, அலீ ரலி அவர்கள் நெஞ்சில் தொப்புளுக்கு மேல் கையைக் கட்டியதாக ஜரீர் அறிவிக்கும் செய்தி அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நபி صلى الله عليه وسلم அவர்கள் நெஞ்சில் கட்டியதாக தெளிவான ஹதீஸ் இருக்கும்போது அதையே ஏற்கவேண்டும்.

ஸனா ஓதுதல் அல்லாஹு அக்பர் என தக்பீர் கூறி நெஞ்சில் கைகளைக் கட்டிக் கொண்டதும் ஸனா ஓதவேண்டும்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகைக்காக தக்பீர் கூறினால் குர்ஆன் வசனங்களை ஓதுவதற்கு முன்பு சிறிது நேரம் மவுனமாக இருப்பார்கள். "இறைத்தூதரே! என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே தாங்கள் என்ன ஓதுகிறீர்கள்?" என நான் கேட்டேன். அதற்கு,

اللَّهُمَّ بَاعِدْ بَيْنِيْ وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدتَّ بَيْنَ اْلَمشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ نَقَّنِيْ مِنَ الْخَطَاياَ كَمَا يُنَقَّى اثَّوْبُ الأبْيَضُ مِن الدَّنَسِ اللَّهُمَّ اغْسِلْ خَطَايَاىَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ


ஸனாவின் பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்கும் இடையை வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக!

இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல என்னை என் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக!

இறைவா! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக!

தக்பீர் கட்டியதும் கீழ்காணும் இந்த வாசகங்களையும் கூறலாம்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழும் போது அல்லாஹு அக்பர் என தக்பீர் கூறியதும்,



பொருள்: இணைவைத்தவர்களில் ஒருவனாக நான் இல்லாமலும், கட்டுப்பட்ட முஸ்லிமாகவும் வானங்களையும் பூமியையும் படைத்தவனை நோக்கி என் முகத்தைத் திருப்புகிறேன். என் தொழுகையும் என் இதர வணக்கங்களுக்கும் என் வாழ்வும் என் மரணமும் அகில உலகையும் படைத்து இரட்சிக்கும் இறைவனுக்கே உரியன. அவனுக்கு நிகராக எவருமில்லை. இவ்வாறு தான் ஏவப்பட்டுள்ளேன். கட்டுப்பட்டு நடப்பவர்களில் நானும் ஒருவன் இறைவனே! நீயே அதிபதி. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவருமில்லை. நீ தூய்மையானவன். நீ புகழுக்குரியவன்.
அறிவிப்பவர் அலி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:முஸ்லிம்
Share

0 comments:

Related Posts with Thumbnails