ஸஜ்தா செய்யும் முறை
ஸஜ்தாவுக்காக நபி صلى الله عليه وسلم குனியும்போது அல்லாஹ் அக்பர் என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
"இரு பாதங்கள், இரு முட்டுக்கால்கள், இரு கைகள், நெற்றி ஆகிய ஏழு உறுப்புகள் தரையில் படுமாறு சஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்" என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறிய சமயம் நெற்றையைக் குறிப்பிடும்போது தமது கையை மூக்கின் மீது வைத்து சுட்டிக் காட்டினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ புகாரி, முஸ்லிம்
முதலாவதாக கையை தரையில் வைத்தல்
"உங்களில் ஒருவர் சஜ்தாச் செய்யும்போது ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம். தனது முட்டுக் கால்களை வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கட்டும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ
கால் விரல்களை கிப்லாவை முன்னோக்கி வைத்தல்
நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையில் ஸுஜுது செய்யும்போது தங்கள் கால் விரல்களை கிப்லாவை முன்னோக்கி வைப்பார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைது அஸ்ஸாயிதி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ
முழங்கையை உயர்த்திக் கொள்ளல்
"நீ ஸஜ்தா செய்யும்போது உனது உள்ளங்கைகளை (தரையில்) வைத்து முழங்கைகளை உயர்த்திக்கொள்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: பராஃபின் ஆஸிப் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம்
தொடையுடன் வயிற்றை சேர்க்கக் கூடாது
நபி صلى الله عليه وسلم அவர்கள் சஜ்தா செய்யும்போது தமது தொடைகளின் மீது வயிற்றைத் தாங்கிக் கொள்ளாமலும் தமது இரு தொடைகளையும் விரித்தவர்களாகவும் சஜ்தா செய்வார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைது அஸ்ஸாயிதி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அஹ்மத்
கைவிரல்களை நடுநிலையாக வைத்தல்
கைவிரல்களை முழுமையாக விரிக்காமலும், முற்றிலுமாக மூடிவிடாமலும் இரண்டிற்கும் இடைப்பட்ட முறையில் வைக்கவேண்டும்
ஸஜ்தாவில் நடுநிலையை மேற்கொள்ளுங்கள்! தமது கைகளை நாய் விரிப்பதுபோல் உங்களில் எவரும் விரிக்கலாகது என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜ்ஜா
ருகூவையும், ஸஜ்தாவையும் பூரணமாகச் செய்தல்
ருகூவையும், ஸஜ்தாவையும் பூரணமாகச் செய்யாத ஒருவரை நபி صلى الله عليه وسلم கண்டபோது, "முஸ்லிம்களே எவர் ருகூவிலும் ஸஜ்தாவிலும் தம் முதுகத் தண்டை நிலைப்படுத்தவில்லையோ அவருக்குத் தொழுகை இல்லை" என்றார்கள். அறிவிப்பவர்: அலீ இப்னு ஷைபான் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், இப்னுமாஜ்ஜா
Traker
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment